அரசு மருத்துவமனையில் பல மணி நேரம் காத்து இருக்கும் நோயாளிகள்... அதிரடி ஆய்வு அதிகாரி...

ஆய்வு
இராசிபுரம் அரசு மருத்துவமனையில் பல மணி நேரமாக நோயாளிகள் காத்திருந்தால் தகவல் அறிந்த மருத்துவ இணை இயக்குனர் அதிரடி ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை மத்திய அரசின் தேசிய தர உறுதி சான்றிதழ் பெற்றமருத்துவமனையாக விளங்குகிறது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ வசதியும் மருத்துவர்களும் பற்றாக்குறையாக உள்ளதாகவும், நோயாளிகள் மருத்துவமனையில் பல மணி நேரம் காத்திருக்கும் அவலங்களை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், மருத்துவமனையில் அலட்சிய போக்குடன் சிகிச்சை அளிப்பதாகவும், நோயாளிகளை வரிசையில் பல பணி நேரம் காத்து இருக்க செய்வதாக மாவட்ட இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன் இன்று அதிரடியாக ஆய்வு செய்தார். மருத்துவமனைக்குள் நுழைந்து இணை இயக்குநர் மருத்துவ அனுமதி சீட்டு பெற காத்து இருந்த நோயாளிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பணியில் உள்ள மருத்துவர்களை சரமாரியாக கேள்வியை எழுப்பினார். இதனால் ஆடிப்போன மருத்துவர்கள் மின்சாரம் அடிக்கடி துண்டிப்பு ஏற்படுவதால் மின்சாரம் இல்லாததால் மருத்துவ அனுமதி சீட்டு வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் இதனால் நோயாளிகள் அதிக நேரம் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் நிலவுவதாக கூறினார். மருத்துவமனை முஇராசிபுரம் ழுவதும் ஆய்வு செய்த இணை இயக்குனர் மருத்துவர்கள் பணியில் ஏன் இப்படி மெத்தனமாக செயல்படுகிறீர்கள்? நோயாளிகள் இவ்வளவு நேரம் வரிசையில் நின்றால் அவர்களின் நிலை என்னவாகும் என வேதனை தெரிவித்ததோடு வரிசையில் நின்ற நோயாளிகளுக்கும் இனி இந்த தவறு நடக்காது என உறுதி அளித்து சென்றார்.
