‘மோடி அரசே வெளியேறு’ என வலியுறுத்தி, மறியல்

‘மோடி அரசே வெளியேறு’ என வலியுறுத்தி, மறியல்

மறியல்

ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியில், மத்திய பாஜக அரசைக் கண்டித்து ‘மோடி அரசே வெளியேறு’ என வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர் மறியல் போராட்டம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பழைய பஸ் நிலையம் ரவுண்டான நோக்கி வந்த 30.க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய பாஜக அரசைக் கண்டித்து ‘ விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மோடி அரசே வெளியேறு’ என வலியுறுத்தி, பழைய பஸ் நிலையம் ரவுண்டானா பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு முடிவுக்கு இணங்க ராசிபுரம் நகரச் செயலாளர்எஸ். மணிமாறன் தலைமை வகித்தார். வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் பி‌.ஆர். செங்கோட்டுவேல், முன்னிலை வகித்தார். இந்த மறியல் போராட்டத்தை முன்னாள் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எஸ். மணிவேல், துவக்கி வைத்தார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் டி.என். கிருஷ்ணசாமி, ஆர். செங்கோட்டையன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சுந்தரம், நாமக்கல் நகர பொறுப்பாளர்மோகன் குமார், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மீனா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் மாதேஸ்வரி, சலீம் சாதிக், மற்றும் நகர குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜா, வேம்பு, பையாஸ், இந்திய மாதர் தேசிய சன் மானத்தின் ராசிபுரம் ஒன்றிய தலைவர் சாவித்திரி, ஒன்றிய செயலாளர் ஞான சௌந்தரி, ஒன்றிய பொருளாளர் தேவி , உள்ளிட்ட பலர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் அவர்களை ராசிபுரம் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து மாலையில் விடுத்தனர்.

Tags

Next Story