பள்ளிபாளையத்திற்கு பூலாம்பட்டி குடிநீர் வழங்க வேண்டும் மேலாண்மை இயக்குனரிடம் மதுரா செந்தில் கோரிக்கை மனு

பள்ளிபாளையத்திற்கு பூலாம்பட்டி குடிநீர் வழங்க வேண்டும்  மேலாண்மை இயக்குனரிடம் மதுரா செந்தில் கோரிக்கை மனு

மதுரா செந்தில் கோரிக்கை மனு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பூலாம்பட்டி குடிநீர் வழங்க வேண்டும் என குடிநீர் வடிகால் துறை மேலாண்மை இயக்குநரை வ.தட்சிணாமூர்த்தியை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில், பள்ளிபாளையம் நகர மன்ற தலைவரும், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பிரதிநிதியுமான எம்.செல்வராஜ் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

சென்னையில் உள்ள குடிநீர் வடிகால் துறை மேலாண்மை இயக்குனர் வ.தட்சிணாமூர்த்தியை, அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகளுக்கு பூலாம்பட்டி குடிநீர் வழங்க மனு அளித்தனர்.

இதையடுத்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட வேளாண்மை இயக்குனர், விரைவில் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Tags

Next Story