தனியார் கல்லூரி மினி பஸ் கவிழ்ந்து 19 பேர் காயம்

X
மினி பஸ் கவிழ்ந்து விபத்து
குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரி மினி பஸ் கவிழ்ந்து 19 பேர் காயமடைந்தனர்.
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் அருகே மங்கரங்கம்பாளையம் விவேகானந்தா கல்லூரியில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர், சங்ககிரி அருகே மரவம்பாளையத்தான் காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், 64. இவர் நேற்று இரவு 07:45 மணியளவில் கல்லூரியில் பணியாற்றும் 19 பணியாளர்களுடன் மினி பேருந்தில் குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி, முனியப்பன் கோவில் அருகே செல்லும் போது, சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள டிவைடரில் மோதி மினி பேருந்து கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 19 நபர்களும் காயமடைந்தனர். இவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story