ராசிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்பாட்டம்.
மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்பாட்டம்.
ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூரில் நடைபெறும் கலவரம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து அனைத்துப் பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. அதன்படி ராசிபுரம் புதிய பஸ் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் வழக்குரைஞர் பாச்சல் ஏ.சீனிவாசன் தலைமை வகித்தார்.
ராசிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஸ்ரீராமுலு ஆர்.முரளி, தொழிலாளர் பிரிவு தலைவர் டி.ஆர்.சண்முகம், நகர்மன்ற காங்கிரஸ் உறுப்பினர் லலிதாபாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வெண்ணந்தூர் காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் சிங்காரம், அத்தனூர் பூபதி, பிள்ளா நல்லூர் சண்முகசுந்தரம், புதுப்பாளையம் பிரகஸ்பதி, நாமகிரிப்பேட்டை இளங்கோ, சேக்உசேன், சுந்தரம், நிர்வாகிகள் பொருளாளர் மாணிக்கம், செயலாளர்கள் ஜெயபால் ராஜ், மாநில மகிளா காங்கிரஸ் மகேஸ்வரி, பழனிச்சாமி,மதுரை வீரன், பெரியசாமி, ராமமூர்த்தி, கோவிந்தராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் பலரும் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி ஒன்றிய அரசை கண்டித்து கோஷமெழுப்பினர்.