பருத்திப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

பருத்திப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

ஆட்சியர் ச.உமா, சின்ராஜ் எம்.பி, ஈஸ்வரன் எம்.எல்.ஏ பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், பருத்திப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 509 பயனாளிகளுக்கு ரூ. 97.50 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், ரூ. 61.00 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய திட்டப் பணிகளுக்கு நிருவாக அனுமதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முகாமில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் அவர்கள், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வழங்கினார்.

இம்முகாமில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 4 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், சுகாதாரத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், வருவாய் துறையின் சார்பில் 136 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 28 பயனாளிகளுக்கு தனிப்பட்டா, 48 பயனாளிகளுக்கு உதவித்தொகை, 13 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் உதவித்தொகை, 2 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, 50 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு பட்டுபுழு வளர்ப்பாளர் அனுமதி புத்தகமும், வேளாண்மைத்துறையின் சார்பில், 10 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள், கூட்டுறவுத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு பயிர் கடனுதவி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 51 பயனாளிகள் மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, தோட்டக்கலைத்துறையின் சார்பில் 10 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் 4 பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை, தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, சமூகநலத்துறை நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தலா 3 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மாற்றுத் திறனாளிக்கு இயந்திரம்,

முன்னோடி வங்கியின் சார்பில் 4 பயானளிகளுக்கு கடனுதவி, மகளிர் திட்டம் சார்பில் 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி, தாட்கோ மூலம் 97 பயனாளிகளுக்கு கடனுதவியும் என 509 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா வழங்கினார்.

தொடர்ந்து, பருத்திப்பள்ளி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கும் என மொத்தம் ரூ.61.00 லட்சம் மதிப்பிட்டில் 2 புதிய திட்டப்பணிகளுக்கு நிருவாக அனுமதியினையும் வழங்கினார்.

முன்னதாக வேளாண் பொறியியல் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்பு துறை, பட்டு வளர்ச்சி துறை, சமூக நலத்துறை, தாட்கோ, வருவாய்த்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட துறை, முதலமைச்சர் மற்றும் பாரத பிரதமரின் மருத்துவ அடையாள அட்டைகள் வழங்கும் முகாம் உள்ளிட்ட அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் த.செல்வகுமரன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் என்.முருகேசன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) மரு.நடராஜன், தோட்டக்கலைத் துறை (துணை இயக்குநர்) கே.கணேசன், மாவட்ட மேலாளர் தாட்கோ ராமசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செ.சதீஸ்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பொ.மா.ஷீலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கே.முருகன், பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் முத்துபாண்டியன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story