ராசிபுரம் அரசு மருத்துவமனையின் அவல நிலை.ஏ கே பி சின்ராஜ் எம்பி அதிருப்தி.

ராசிபுரம் அரசு மருத்துவமனையின் அவல நிலை.ஏ கே பி சின்ராஜ் எம்பி அதிருப்தி.
X

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களும் செவிலியர்களும் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுவதை கண்ட நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ கே பி சின்ராஜ் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

மத்திய அரசின் A1 தரச் சான்றிதழ் பெற்ற ராசிபுரம் அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை ஏ கே பி சின்ராஜ் எம். பி தனது காரில் ஏற்றிக்கொண்டு அனுமதிக்க வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, முதலுதவி செய்ய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து பத்து நிமிடங்களிலேயே பத்துக்கும் மேற்பட்ட விபத்து மற்றும் பாம்பு கடி, தேள் கடி நோயாளிகள் மருத்துவமனையில் குவிந்த நிலையில் பணியில் இருக்க வேண்டிய மருத்துவர்கள் செவிலியர்கள் யாரும் இல்லாததால் இங்கிருந்து நீங்கள் சாவதற்கு தனியார் மருத்துவமனைக்காவது செல்லுங்கள் என ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ கே பி சின்ராஜ் மருத்துவமனை வந்த நிலையில் அங்கு 2 மணி நேரம் ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இங்கும் அங்கும் ஓடிய காட்சி பார்ப்பதற்கு பாவமாகவே இருந்தது.

Tags

Next Story