ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையாள் கைது செய்யப்பட்ட ஐந்து விசைப்படகு 27 மீனவர்களையும் 28 10 2023 அன்று இலங்கை கடற்படையார் கைது செய்யப்பட்ட ஐந்து விசைப்படகு 37 மீனவர்களையும் மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து மீட்டர் தரக்கோரியும்,

இலங்கை கடற்படையால் முட்டி மூழ்கடிக்கப்பட்ட விசைப்படகுகளுக்கும் மற்றும் மீட்க முடியாத விசைப்படகுகளுக்கும் ரூபாய் ஒரு படகிற்கு 30 லட்சம் இழப்பீடு வழங்கி படகை இழந்த மீனவர் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டிய நீண்ட காலமாக இருந்து வரும் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக பாரம்பரிய கச்சத்தீவு பகுதியில் மீன் உரிமையை பெற்று தரக்கூடிய மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தங்கச்சிமடம்

வலசை பேருந்து நிறுத்தத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் தற்போது நடைபெற்று வருகிறது இந்த மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ராமேஸ்வரத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்

Tags

Next Story