ராசிபுரம் நகர மன்ற கூட்டம்
நகர மன்ற கூட்டம்
ராசிபுரம் நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் இரா.கவிதா சங்கர் கலந்துகொண்டு தலைமை தாங்கினார்.
ராசிபுரம் நகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலைய நுழைவு பகுதியின் முன்புறம், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 22 மீட்டர் அகலம் மற்றும் 7 மீட்டர் உயரத்தில் நினைவு வளைவு கட்டுவதற்கு அனுமதி வழங்குவது , ராசிபுரம் நகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்துமிடம் மற்றும் பொதுமக்கள் நடைபாதைகளில் உள்ள மேற்கூரை மிகவும் பழுதடைந்து பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளதால் பழுதுகளை சரி செய்வது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் ராசிபுரம் நகர மக்களின் அன்றாட தேவைகளான குடிநீர் பிரச்சனை, மின்விளக்கு, பாதாள சாக்கடை போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இப்பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் என நகர மன்ற தலைவர் உறுதியளித்தார்.
இந்த கூட்டத்தில் ராசிபுரம் நகர மன்ற துணைத் தலைவர் கோமதி ஆனந்தன், நகராட்சி ஆணையாளர் த.வ.சுபாஷினி, நகராட்சி பொறியாளர் சாந்தி வடிவேல், நகராட்சி கணக்கர் சோ.மாலதி, பொதுப்பணி மேற்பார்வையாளர் தேவி, துப்புரவு அலுவலர் மு.செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் மாணிக்கம், நகர அமைப்பு அலுவலர் ராஜேந்திரன், நகர அமைப்பு ஆய்வாளர் முருகேசன், குழாய் பொருத்தனர்கள் மூர்த்தி, ஸ்ரீதர், அரசு அதிகாரிகளும், அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.