ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்

ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்
X

 சங்கத் தேர்தல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைவர் துணைத் தலைவர் செயலாளர் இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து தலைவர் பதவிக்கு எம்.வாசுதேவன் ஏ. நடராஜன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் எம் வாசுதேவன் 54 வாக்குகள், ஏ நடராஜன் 44 வாக்குகள் பெற்றனர். 13 வாக்கு வித்தியாசத்தில் எம். வாசுதேவன் வெற்றி பெற்றார்.

இதே போல் துணைத் தலைவர் பதவிக்கு கே.சுந்தர்ராஜன், பி. ஹரிஹரசுதன் போட்டியிட்டனர். கே. சுந்தரராஜன் 54 வாக்குகள், பி. ஹரிஹரசுதன் 47 வாக்குகள் பெற்றனர். இதில் ஏழு வாக்குகள் வித்தியாசத்தில் கே. சுந்தரராஜன் வெற்றி பெற்றார்.

செயலாளர் பதவிக்கு ஆர்.கே.டி.தங்கதுரை, பி. ரமேஷ் யுவராஜா போட்டியிட்டனர். ஆர் கே டி தங்கதுரை 50 வாக்குகள் பி ரமேஷ் யுவராஜா 51 வாக்குகள் பெற்றனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் பி. ரமேஷ் யுவராஜா வெற்றி பெற்றார். இணைச் செயலாளர் பதவிக்கு எம்.அருள், முருகன், கே. செங்குட்டுவன் ஆகியோர் போட்டியிட்டனர். எம் அருள் முருகன் 52 வாக்குகளும் கே. செங்குட்டுவன் 49 வாக்குகள் பெற்றனர். மூன்று வாக்கு வித்தியாசத்தில் எம். அருள் முருகன் வெற்றி பெற்றார்.

பொருளாளர் பதவிக்கு ஏ. கதிர்வேல், ஓ பெரியசாமி ஆகியோர் போட்டியிட்டனர். ஏ கதிர்வேல் 52 வாக்குகளும், ஓ. பெரியசாமி 49 வாக்குகள் பெற்றனர். மூன்று வாக்கு வித்தியாசத்தில் ஏ. கதிர்வேல் வெற்றி பெற்றார். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவிப்புகள் வெளியிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கறிஞர்கள் வெற்றி பெற்ற அனைவரையும் சால்வை அணிவித்து மற்றும் மாலைகள் அணிவித்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கிய உற்சாகமாக கொண்டாடினர். தொடர்ந்து கிரேன் மூலம் பெரிய மாலை அணிவித்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில் பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு காமராஜ், மற்றும் ஏராளமான நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடினர்.

Tags

Next Story