அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது, கனவு காணட்டும்' என கனிமொழி பதிலடி

கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று திரும்பிய நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், தி.மு.க. அரசு இன்னும் 48 மணி நேரத்தில் ஆட்டம் காணும் என்றும், செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவ மணையில் தான் உள்ளாரா என்கின்ற பல சந்தேகங்கள் தீர்க்கப்படும் நேரம் நெருங்கி விட்டது. தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியேவா? – என பதிவிட்டு இருந்தார்.அவரது கருத்துக்கு தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் டுவிட்டரில் பதில் கருத்து பதிவிட்டு வந்த நிலையில், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்திய எச்.ராஜாவின் கருத்து குறித்து தூத்துக்குடியில் தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது, கனவுகள் காணட்டும். நாம் என்ன செய்ய முடியும்?" என்று தெரிவித்தார்.

Tags

Next Story