சேந்தமங்கலத்தில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் மு.க.ஸ்டாலின் திறப்பு

சேந்தமங்கலத்தில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம்  மு.க.ஸ்டாலின் திறப்பு

சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் திறப்பு 

சேந்தமங்கலத்தில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

பதிவுத்துறை வாயிலாக மக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தைப் பதிவு செய்தல், சங்கங்கள், சீட்டுகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனம் போன்ற குழுவாகக் கூடி செயல்படும் நடவடிக்கைகளைப் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சேந்தமங்கலத்தில் பதிவுத்துறையின் சார்பில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலக கட்டடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றினார்.

சேந்தமங்கலத்தில் பதிவுத்துறையின் சார்பில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதியதாக சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த சார்பதிவாளர் அலுவலகமானது தரைதளம் 156 சதுர மீட்டரும், முதல் தளம் 150 சதுர மீட்டரும் என மொத்தம் 306 சதுர மீட்டர் பரப்பளவில் அமைய பெற்றுள்ளது.

தரைதளத்தில் அலுவலக அறை, கணினி அறை, பார்வையாளர் அறை, இ ஸ்டேம்பில் அறை, மதிய உணவு அறை மற்றும் கழிவறையும், முதல் தளத்தில் பதிவு அறை, சரக்கு அறை, பொருட்கள் அங்காடி அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சேலம் மண்டல பதிவுத்துறை துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், நாமக்கல் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) எஸ்.சந்தானம், சேந்தமங்கலம் சார்பதிவாளர் ராசப்பன், சேந்தமங்கலம் ஒன்றிய திமுக செயலாளர் அ.அசோக்குமார், சேந்தமங்கலம் வட்டாட்சியர் செந்தில், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story