பழுதடைந்த நியாய விலை கடை மற்றும் நீர் தேக்க தொட்டி சரி செய்ய கோரிக்கை
நியாய விலை கடை மற்றும் நீர் தேக்க தொட்டி சரி செய்ய கோரிக்கை
திருப்பத்தூர் அருகே உள்ள நியாய விலை கடை மற்றும் பழுதடைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியில் உள்ள நியாய விலை கடை மற்றும் பழுதடைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி பகுதிக்குட்பட்ட குருமன்ஸ் காலனி பகுதியில் 1997ஆம் ஆண்டு 30,000 கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தக்க தொட்டி கட்டப்பட்டது இதிலிருந்து விநியோகிக்கப்படும் குடிநீரை நம்பி சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து கம்பிகள் வெளியே நீட்டியவாரும் சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து எப்ப வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் கீழ் அங்கன்வாடி கட்டிடமும் உள்ளது இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் பயின்று வருகின்றனர். மேலும் அதே பகுதியில் உள்ள நியாய விலை கடையின் கட்டிடம் மிகவும் விரிசல் விட்டும் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மிகவும் பழுதடைந்துள்ளது. மேலும் இந்த நியாய விலைகடைக்கு ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்வதுண்டு அதைத்தொடர்ந்து இந்த நியாயவர்களை 600க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். எனவே எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறும் முன்னர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் நியாய விலை கடையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Next Story