கடற்கரையில் மீனவர்களுக்கு சாலை வசதி
கடற்கரையில் சாலை வசதி
கடற்கரையில் சாலை வசதி அமைக்க ஏற்பாடு செய்த திமுக நிர்வாகி
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இடிந்தகரை மீனவர்கள் கடலில் மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பும் போது கடற்கரையில் வாகனங்கள் செல்வதற்கு வழிப்பாதை சரிவர இல்லாமல் இருந்து வந்தது. இதன் காரணமாக படகுகளில் இருந்து தரையில் நிற்கும் வாகனங்களுக்கு மீன்களை எடுத்துச்செல்ல மீனவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.இதனால் அந்த பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர உதவிடுமாறு மீனவர்கள் தி.மு.க. இளைஞரணி நிர்வாகியான விஜயாபதி ஏ.ஆர்.ரகுமானிடம் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் ஆலோசனையின் பேரில் மீனவர்கள் நலனை கருத்தில் கொண்டு விஜயாபதி ரகுமான் தனது சொந்த செலவில் கடற்கரையில் சாலை வசதி அமைக்க ஏற்பாடு செய்தார். இடிந்தகரையில் தரையில் இருந்து கடல் வரையிலும் சுமார் 800 மீட்டர் தூரத்துக்கு தனது சொந்த செலவில் பாதை வசதி ஏற்படுத்தி கொடுத்தார். அந்த பணிகளை இன்று அவர் ஆய்வு செய்தார். அப்போது மீனவர் பிரதிநிதிகள் இடிந்தகரை வெனிஸ்லாஸ், ரமேஷ், ராமு, செல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story