சங்ககிரி : கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

சங்ககிரி : கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
X

 2 பேர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்படும் தனியார் கலை மற்றும் அறிவியல் தனியார் கல்லூரியில் பி.காம். சி. ஏ முதலாம் ஆண்டு படித்து வரும் திருப்பூர் சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த புவனேஷ் (18) சங்ககிரி நாகிசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சார்லஸ்(17) ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த தீபக் (18) தேவூர் காணியாளம்பட்டி பகுதி சேர்ந்த சஞ்சய் (18) ஆகிய நான்கு கல்லூரி மாணவர்கள் சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள சீரங்க கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிஷோர்(18) என்ற மற்றொரு நண்பரின் விவசாய தோட்டத்தின் பகுதியில் குறும்படம் எடுப்பதற்காக சென்று உள்ளனர்.அப்போது அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சஞ்சீவ்ராஜ் என்ற மாணவன் முதலில் கிணற்றில் குளிக்க இறங்கியுள்ளார் . திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி உள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக தீபக் கிணற்றில் குதித்துள்ளார். அப்போது த சஞ்சீவ் ராஜ் தீபக்கும சேர்த்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயர்ந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த தேவூர் போலீசார் குமாரபாளையம் தீயணைப்புத்துறை வீரர்களின் உதவியோடு 3 மணி நேரம் போராடி நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு மாணவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் பின்னர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சங்ககிரி அருகே நண்பர்களுடன் குறும்படம் எடுக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

Tags

Next Story