பாமக பேரூர் கழகம் சார்பில் மரக்கன்று நடும் விழா
மரக்கன்று நடும் விழா
எருமப்பட்டி பாமக பேரூர் கழகத்தின் சார்பில் மருத்துவர் ராமதாஸின் 85 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா பேரூர் இளைஞர் சங்க செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் அரிமா மோகன்ராஜ், மாநில மாணவர் சங்க செயலாளர் பாலு, பன்னீர், மாநில துணைச் செயலாளர் மனோகரன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் கலைவாணன், மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் மற்றும் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story