வீட்டிற்கு ஒரு விருட்சம் திட்டத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மரக்கன்றுகள்

வீட்டிற்கு ஒரு விருட்சம் திட்டத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மரக்கன்றுகள்

வீட்டிற்கு ஒரு விருட்சம்

நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படை சார்பாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் வீட்டிற்கு ஒரு விருட்சம் என்ற சிறப்பு திட்டத்தில், 26 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் தலைமை தாங்கினார். துவக்க விழாவில், மெட்ரிக் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் பி.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் பசுமை படை மாணவர்களுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார். மேலும் நாமக்கல் மாவட்ட கல்வி (இடைநிலை) அலுவலகத்தில் உள்ள அலுவலர்களுக்கும் மாவட்ட பசுமை படை சார்பாக முள் இல்லா மூங்கில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story