பள்ளிச்செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில் தீவிரம் காட்ட வேண்டும்

பள்ளிச்செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில் தீவிரம் காட்ட வேண்டும்

மாவட்ட ஆட்சியர் உமா 

மாவட்ட ஆட்சியர் உமா வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, நாமக்கல் மாவட்டம் பள்ளி செல்லாக் குழந்தைகள் திட்டக்கூறின் கீழ் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மூன்றடுக்கு குழு கூட்டம் மற்றும் பள்ளி செல்லா / மாற்றுத் திறன் கொண்ட (6 முதல் 18 வயது வரை) பள்ளி பொதுத்தளத்தில் உள்ள மாணவர்கள் கணக்கொடுப்பு தொடர்பானமாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஜூன்-2023 மாத கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான கூட்டத்தின் கூட்டக்குறிப்புகளில் தெரிவிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்க ஏதுவாக நாமக்கல் ஒன்றியத்தில் 4 மையங்களும் நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம் மற்றும் கபிலர்மலை ஒன்றியத்தில் தலா 1 மையமும் ஆரம்பிக்கப்பட்டு 111 குழந்தைகள் 7 தன்னார்வலர்களுடன் மையங்கள் செயல்பட்டு வருகிறது.

தொழிலாளர் உதவி ஆணையர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் உதவி மையம், உதவி திட்ட அலுவலர் மற்றும் கலால் துறை துணை ஆட்சியர் ஆகியோர் உதவியுடன் நாமக்கல் ஒன்றியம் சூரக்காபாளையம், நகராட்சி வார்டு 37, புதுச்சத்திரம் ஒன்றியம் மின்அண்ணாநகர், எருமப்பட்டி ஒன்றியம் பொட்டிரெட்டிப்பட்டி, போடிநாய்க்கன் பட்டி மற்றும் கபிலர் மலை ஒன்றியம் பல்லாபாளையம் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பள்ளிச்செல்லா குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

பள்ளிக்கு தொடர் வருகை புரியாத மாணவர்கள் உள்ள மல்லசமுத்திரம் ஒன்றியம் நாய்க்கர் வலவு ஜக்கம்மா தெரு ,மற்றும் சேந்தமங்கலம் ஒன்றியம் மலைவேப்பன்குட்டை பகுதிகளில் பிற துறை உதவியுடன் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்ததாவது,

2023-2024 ஆம் கல்வியாண்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளிச்செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு கைபேசி செயலியின் மூலம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இக்கணக்கெடுப்பில் பள்ளிப் பொதுத்தளத்தில் உள்ள 6,338 மாணவர்கள் கண்காணிக்கபட உள்ளனர். அம்மாணவர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களின் எமிஸ் செயலியில் காண்பிக்கப்பட வேண்டும். அவர்களை இருப்பிடத்திற்கே சென்று கள ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் தற்போதைய நிலையினை பதிவேற்றம் செய்வதுடன் அம்மாணவன் பள்ளியில் சேர்க்க வேண்டிய மாணவன் எனில் அம்மாணவனை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்துடன் 30 நாட்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களையும் கண்காணிக்க வேண்டும்.

இக்கணக்கெடுப்பு பணியில் பள்ளியில் சேர்க்க வேண்டிய குழந்தை என கண்டறியப்பட்டவர்களை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களால் பள்ளியில் சேர்க்க இயலவில்லை எனில் அம்மாணவர்களை தொடர்புடைய பிறத்துறை அலுவலர்கள் உதவியுடன் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், கிராமப்புற செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்வி தன்னார்வலர்கள் அனைவரும் இக்கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும் கணக்கெடுப்பு விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் கணக்கெடுப்பு செயலியில் (Survey App) பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் எவரேனும் கண்டறியப்படின் 1098 என்ற இலவச சேவை எண்ணிற்கு அல்லது சார்ந்த வட்டார வள மையத்திற்கு பொதுமக்கள் தெரியப்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்தார்.

Tags

Next Story