தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் முழு வேலை இயங்கும்

தமிழ்நாடு முழுவதும் நாளை சனிக்கிழமை அனைத்துப் பள்ளிகள் முழுவேலை நாளாக இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. நாளை தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் ஆகும். எனவே அவரது பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதியில் கல்வி வளர்ச்சி தினமாகக் கொண்டாடபப்டுவதால் நாளை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் முழு வேலை நாள் என்று அரசு அறிவித்துள்ளது.
மேலும், காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பள்ளிகளில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்த வேண்டும் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags
Next Story
