தடகள போட்டியில் சேந்தமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

தடகள போட்டியில் சேந்தமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

அரசு பள்ளி மாணவிகள் சாதனை

பள்ளி கல்வித்துறை, ராமநாதபுரம் புதுார் அரசு உயர்நிலைப்‌ பள்ளியின் சார்பில் சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் வட்ட அளவிலான இருபாலர் தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் தடகள போட்டியில் பங்கேற்ற சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி இலக்கியா உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்றார். மாணவி சந்தியா தட்டு எரிதல் போட்டியில் முதலிடம் பெற்றார். மேலும் 1500 மீட்டர், 3000 மீட்டர் ஓட்டபந்தயம், தட்டு எரிதல், ஈட்டி எரிதல், குண்டு எரிதல், தடியூன்றி தாண்டுதல், கபாடி போட்டி, எறிபந்து, இறகு பந்து, வளைய பந்து, சதுரங்கப் போட்டி, சுண்டு ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விளையாடினர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய திமுக செயலாளரரும் அட்மா குழு தலைவருமான அசோக்குமார் தலைமை தாங்கினார். விழாவில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே. பொனனுசாமி பங்கேற்று விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

விழாவில் ஆசிரியர் சுமதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணகுமார், அட்மா குழு துணை தலைவர் தனபால், டவுன் பஞ்., துணை தலைவர் ரகு, பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டினர்.

Tags

Next Story