ராசிபுரம் மகளிர் உரிமைத் தொகை உதவி மையத்தில் சர்வர் கோளாறு - பொதுமக்கள் கடும் அவதி

ராசிபுரம் மகளிர் உரிமைத் தொகை உதவி மையத்தில் சர்வர் கோளாறு - பொதுமக்கள் கடும் அவதி
X

பொதுமக்கள் கடும் அவதி

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டவர்கள் அதன் காரணம் குறித்து தெரிந்து கொள்ள நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கி செயல்பட்டு வருகிறது. தங்களது விண்ணப்பம் குறித்து தெரிந்து கொள்ள சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள தகவல் மையம், இ சேவை மையம் ஆகியவற்றில் கூடினர். இதனால் சர்வர் கோளாறு ஏற்பட்டு கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் 200 க்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Tags

Next Story