கந்தசாமி கோவிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு

கந்தசாமி கோவிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு

சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜையில் வள்ளி தெய்வானையுடன் முருகன் சிறப்பு தோற்றத்தில் அருள் பாலித்தார்.

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நேற்று சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி முருகன் கோவிலில் நேற்று, ஆடி மாத வளர்பிறை சஷ்டி திதியை முன்னிட்டு, மூலவர் சிறப்பு தோற்றத்தில் அருள் பாலித்தார். கோவில் உட்பிரகாரத்தில் வள்ளி தெய்வாணையருடன் முருகன் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story