மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி

மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்லில் சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சர்வதேச சைகை மொழிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 23 அன்று கொண்டாடப்படுகிறது. சைகை மொழிகளின் சர்வதேச தினம் என்பது காது கேளாதோர் அல்லது பிற சைகை மொழிப் பயனாளர்களின் மொழியியல் அடையாளத்தைப் பாதுகாக்க கொண்டாடப்படுகிறது.

காது கேளாதவர்களுக்கான தகவல்தொடர்பு ஊடகமாக சைகை மொழி சேவையாற்றி வருவதால், அதற்கு அதிகபட்ச மதிப்புகளை நாம் கொடுக்க வேண்டும். உலக காது கேளாதோர் கூட்டமைப்பு செய்த ஆராய்ச்சியின் படி, உலகில் 70 மில்லியனுக்கும் அதிகமான காது கேளாதோர் வாழ்கின்றனர், மேலும், அவர்கள் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே, சைகை மொழி என்பது திறமையான அம்சங்களில் ஒன்றாகும், இதன் மூலம் அவர்கள் ஒருவருக்கொருவர் எளிதாக தொடர்பு கொள்ள முடியும். நம் உலகில் 300 ஐ தாண்டிய பல்வேறு சைகை மொழிகள் உள்ளன. இருப்பினும், சர்வதேச மாநாடுகள் அல்லது கூட்டங்களில் காது கேளாதவர்கள் தங்கள் நோக்கங்களை வெளிப்படுத்த சர்வதேச சைகை மொழி பயன்படுத்தப்படுகிறது.

நாமக்கல் மாவட்ட மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில், சர்வதேச சைகை மொழிகள் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் சர்வதேச காது கேளாதோர் வாரம் விழிப்புணர்வு முகாம், நாமக்கல்லில் நடைபெற்றது.

நாமக்கல்–மோகனூர் ரோட்டில் உள்ள நியூ லைப் காது கேளாதோர் பள்ளி அருகில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி, நாமக்கல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, திருச்சி ரோட்டில் முடிவடைந்தது. பேரணியில், சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்து, சைகை செய்தவாரும், இந்தியாவில் பயன்படுத்தப்படும் சைகை மொழிகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.

தொடர்ந்து, நடந்த முகாமில், இந்திய சைகை மொழிகளை எவ்வாறு பயன்படுத்துவது, சைகை மொழி பழகுவதற்கான காரணங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

Tags

Next Story