கோட்டப்பாளையத்தில் மண்மாதிரி சேகரித்தல் முகாம்
முகாம்
கோட்டப்பாளையம் கிராமத்தில், மண் மாதிரி சேகரித்தல் முகாம் நடந்தது.
மல்லசமுத்திரம் வட்டாரம், கோட்டப்பாளையம் கிராமத்தில், 2023 - 24ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தின்கீழ், திருச்செங்கோடு நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் மூலம் மண் மாதிரிகள் சேகரிப்பு முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமை வகித்து, மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றி கூறினார்.
திருச்செங்கோடு நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் நடமாடும் மண் பரிசோதனை வாகனம் மூலம் விவசாயிகளிடம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனடியாக மண் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு ஆய்வு அறிக்கை விவசாயிகளிடம் வழங்கப்பட்டது.
இந்தஅறிக்கையில், பயிர் சாகுபடி நிலத்தின் தன்மைகளான கார அமிலத்தன்மை, தொழுஉரம், பயிருக்கு தேவையான உரங்கள், நுண்ணுட்டச்சத்து, மற்றும் பேரூட்டச் சத்துக்கள், இருப்பு விவரம் தெரிவிக்கப்பட்டு அவற்றினை பயன்படுத்தும் அளவு ஆகிய விவரங்கள் விவசாயிகளுக்கு நேரடியாக விளக்கப்பட்டு பயிர் சாகுபடி செய்யும் முன் மண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மூத்த வேளாண்மை அலுவலர் சௌந்தர்ராஜன் கூறினார். நடமாடும் மண் பரிசோதனை நிலையம் வேளாண்மை அலுவலர் அருள்ராணி, மல்லசமுத்திரம் வட்டார துணை வேளாண்மை அலுவலர் பழனிவேல், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என்ன பலர் கலந்து கொண்டனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலர் வேல்முருகன் செய்திருந்தார்.