பள்ளிகளில் விண்வெளி பாடத்திட்டம்.!

பள்ளிகளில் விண்வெளி பாடத்திட்டம்.!

மயில்சாமி அண்ணாதுரை

விண்வெளி பாடத்திட்டத்தை பள்ளிகளில் கொண்டு வரலாம் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூர் வந்த சந் திரயான்-1 திட்ட இயக் குனர் மயில்சாமி அண் ணாதுரை நிருபர்களை சந்தித்து பேசினார். அப் போது அவர் கூறியதாவது: பாடத்திட்டத்தில், விண்வெளி பாடத்திட் 'டத்தை சிறு வயதிலிருந்து பள்ளி மாணவர்கள் படிக் கத் தொடங்கினால், இந் தியாவில் பல விஞ்ஞானி களை நம்மால் உருவாக்க முடியும். அமெ ரிக்கா போன்ற பல்வேறு வெளி நாடுகளில், சிறு வயதிலிருந்து அவர்கள் விண் வெளி பற்றி பாடத் திட்டத் தில் கொண்டு வந்து படித்து வருவதால், விண்வெளி யில் அதிக ஆர்வம்கொண் டுள்ளனர். அதேபோல், இந்திய அரசும் நமது பாடத்திட்டத்தில் விண் வெளி பாடத்திட்டத்தைகொண்டு வர வேண்டும். குலசேகரப்பட்டினத் தில் ராக்கெட் ஏவுதளம்அமைந்தால் சிறிய அளவி லான செயற்கை கோள் முதல் பெரிய அளவி லான செயற்கை கோள் வரை விண்ணில் ஏவ முடியும். தற் போது பல்வேறு பகுதிகளில் இருந்து தேவை உபகரணங்கள் யான பெற்று. அதனை ஒருங் கிணைத்து விண்ணில் ஏவப்படுகிறது. குலசேகரப் பட்டினத்தில் அனைத்து செயற்கைக் கோள்களை யும் தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ள முடியும். இந்தியாவுக்காக 140 செயற்கை கோள் களும், வெளிநாடுகளுக் காக 400க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள் ளது. நிலவுக்கு செல்ல சீனா அழைப்பு விடுத் துள்ளது இந்தியா ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் அழைப்பு விடுத்தது. நில வுக்கு செல்வதில் போட்டி இருக்கக் கூடாது. உலகத் திற்கு தேவையான கனிம வளங்கள் அங்குள்ளது. ஏற்கனவே அமெரிக்கா வுடன் இது குறித்து புரிந் துணர்வு ஒப்பந்தம் உள் ளது. அத்தோடு ரஷ்யா போன்ற நாடுகளையும் இணைத்து, நிலவுக்குச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story