ஸ்ரீ ராமலிங்க செளடேஷ்வரி அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்கார பூஜைகள்
செளடேஷ்வரி அம்மன்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் கொண்டமநாயக்கன்பட்டி கிராமம் ஸ்ரீ ராமலிங்க செளடேஷ்வரி அம்மன் கோவில் வரலட்சுமி விரதம் முன்னிட்டு முலவர் ஸ்ரீ ராமலிங்க செளடேஷ்வரி அம்மன் வளையல் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் ஸ்ரீ ராமலிங்க செளடேஷ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வளையல் அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து குத்து விளக்கு பூஜை நடை பெற்றது. இப்பூஜையில் நூற்றுக்கணக்கான சுமங்கலி பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து அம்மன் அருள் பெற்றனர்.
Next Story