தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்
X

ஒன்றிய செயற்குழு கூட்டம் 

வேலகவுண்டம்பட்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

எலச்சிபாளையம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டியில் நடந்த ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய இலக்கியஅணி அமைப்பாளர் செந்தில் வெங்கடாசலம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் சுமதி தொடக்க உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் பேபி தீர்மானங்கள் குறித்து விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் சங்கர் சிறப்புரையாற்றினார். மாநில பொருளாளர் முருகசெல்வராசன் இயக்க உரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் தண்டபாணி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் நிர்மலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இக்கூட்டத்தில் இடைநிலை, சாதாரண நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். புதிய தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதி திட்டத்தினை தொடங்க வேண்டும். பேரறிஞர் அண்ணா ஆட்சி காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து விடுப்பூதியம் பெரும் உரிமையை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். பனிமூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி பட்டதாரி ஆசிரியர், தமிழ் ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும். பள்ளி தகவல் மேலாண்மை மைய பணிகள் அன்றாட பள்ளி கல்விப் பணிகளை பெரிதும் பாதிப்படையச் செய்து வருகின்றது. இயங்கலை பணிகளில் இருந்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் விடுவிக்கப்படுதல் வேண்டும். தொடக்க கல்வியை பெரிதும் பாதிப்படைய செய்து வகுப்பறை கற்றல்- கற்பித்தலை பின்னுக்கு தள்ளிடும் பேராதிக்கத்தினை கைவிட வேண்டும். எண்ணும் எழுத்தும் கல்வி திட்டம் தொடக்கப் பள்ளியில் சிறப்பாக நடக்கும் வகையில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:10 என்று மேம்படுத்தி அறிவிக்கப்பட வேண்டும். எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பாடங்கள், பாடநூல் பயிற்சி எடுங்கள் கையேடுகள் ஆகியவற்றை முடித்து மாணவர்கள் மகிழ்வுடன் கற்கும் வகையில் பாடச் சுமையை குறைக்க வேண்டும். மேலும், எண்ணும் எழுத்தும் கல்வித் திட்டத்தை மேல் வகுப்புகளுக்கு விரிவுபடுத்துவதற்கு முன் முந்தைய வகுப்புகளின் கற்றல் அடைவுகள் குறித்து ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பொதுப் பட்டியலில் இருந்து கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

படவிளக்கம்:

எலச்சிபாளையம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது.

Tags

Next Story