தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநாடு

X
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநாடு
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநாடு செஞ்சியில் நடைபெற்றது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைர விழா ஆண்டை முன்னிட்டு வருவாய்த்துறை அலுவலர் சங்க செஞ்சி வட்டக்கிளை மாநாடு செஞ்சியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயலர் வெங்கடபதி முன்னிலை வகித்தார். பொருளாளர் கண்ணன் வரவேற்றார். வட்ட தலைவர் பிரபு சங்கர், செயலர் பரமசிவம், பொருளாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னையில் நடைபெறும் வைரவிழா ஆண்டு மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தாசில்தார் மு.ஏழுமலை, மண்டல துணை தாசில்தார் வேல்முருகன், தேர்தல் துணை தாசில்தார் ரவி, தனி தாசில்தார் துரைசெல்வன், மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story
