நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா

ஆசிரியர் தின விழா

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இராஜா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு ஆசிரியரிடையே மாணவர்களின் நலனுக்காக கடினமாக உழைக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு மாணவனையும் தலைசிறந்த குடிமகனாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும், சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் வாழக்கூடியவர்களாகவும் மாற்றக் கூடியவர்களாக ஆசிரியர்கள் திகழ்ந்து வருகின்றனர் எனவும், தொடர்ந்து ஒவ்வொரு ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறி பேராசிரியர்களை வாழ்த்தி பேசினார். தொடர்ந்து ஆசிரியர்கள் கல்லூரி வளாகத்தை தூய்மையாக பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத வளாகமாக வைத்துக் கொள்ள உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பேராசிரியர்களுக்கும் எலுமிச்சை, மகிழம், நெல்லி, சந்தனம், தேக்கு, பூவரசு போன்ற மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உள்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், பல்வேறு துறையை சார்ந்த துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், ஆய்வக உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர பாண்டியன் மற்றும் பசுமை மன்ற ஒருங்கிணைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story