தென்காசி மாவட்டத்தில் சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு ஆய்வு

உறுதிமொழிக் குழு ஆய்வு 

பெ.ராமலிங்கம் பங்கேற்பு

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவின் ஆய்வு அதன் தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் இக்குழுவின் உறுப்பினரான நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் கலந்து கொண்டார்.

இக்குழுவானது குற்றாலம் கலைவாணர் அரங்கம் புதுப்பித்தல், குற்றாலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்குவதற்கான திரு.வி.க. இல்லம் புதுப்பித்தல், மாவட்ட காவல் ஆய்வாளர் அலுவலக கட்டுமானம், குற்றாலம் அருவியின் அருகே உள்ள சாலையோர கடைகள் ஒருமாதத்திற்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு சேதமடைந்ததை பார்வையிடுதல், தென்காசி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு மையத்துக்கு புதிய கட்டிடங்கள், புதிய மாவட்ட மருந்து கிடங்கு கட்டுமானம், இலத்தூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பணிகளை ஆய்வு செய்தனர்.

பெ.ராமலிங்கம் பங்கேற்புபின்னர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சட்டமன்ற உறுதிமொழிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன் (அண்ணாநகர்) வில்வநாதன் (ஆம்பூர்) அருள்( சேலம் மேற்கு), ஜெயக்குமார் (பெருந்துறை) அண்ணாதுரை (மயிலாடுதுறை), சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்) உறுதிமொழிக் குழு செயலாளர் சீனிவாசன், துணைச் செயலாளர் ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், திட்ட அலுவலர் மைக்கேல் ஆண்டனி பெர்னான்டோ, வருவாய் கோட்டாச்சியர் லாவண்யா மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story