தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனை மும்முரம்

தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனை மும்முரம்

தேசிய கொடி 

பொதுமக்கள் ஆர்வம்

தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனை மும்முரம் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்..

பிரதமர் மோடி சுதந்திர தின விழாவையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை பறக்க விட்டு கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைவருக்கும் இந்திய தேசிய கொடி எளிதில் கிடைக்கும் பொருட்டு அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலை ரூ.25 மட்டுமே. ஜி.எஸ்.டி கிடையாது என தபால் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் நாமக்கல் கோட்டத்தில் உள்ள நாமக்கல் தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தேசிய கொடியினை தபால் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினவிழா கொண்டாடுவதற்காக ஆர்வமுடன் தேசியக் கொடிகளை வாங்கிச் சென்றனர்.

Tags

Next Story