எலச்சிபாளையத்தில் காத்திருப்பு போராட்டம் வாபஸ்
எலச்சிபாளையம் சந்தைப்பேட்டையில், துணைதாசில்தார் நேரில் விசாரணை நடத்தியதால், பட்டா கேட்டு காத்திருக்கும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
எலச்சிபாளையம், சந்தைப்பேட்டையில் பகுதியில், 40 குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக வீட்டுமனை பட்டா இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து, இப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று (03-08-2023) தமிழ் மாநில விவசாயிகள் சங்கம் சார்பில், எலச்சிபாளையம் ஆர்.ஐ., அலுவலகம் முன்பாக, காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்து, முக்கிய இடங்களில் தட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் திருச்செங்கோடு துணை தாசில்தார் சௌண்டீஸ்வரி, ஆர்.ஐ., செல்லதுரை, வி.ஏ.ஓ.,சிவலிங்கம் ஆகியோர் சந்தைப்பேட்டை பகுதிக்கு நேரில் வந்து, விசாரணை மேற்கொண்டனர். உடனடியாக அப்பகுதி மக்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் அடிப்படையில், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.