பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர் - தலைமை ஆசிரியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம்

போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளி மாணவனை ஆசிரியர் தாக்கியதாக பெற்றோர் மற்றும் உறவினர்களா பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுதியுள்ளது
போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளி மாணவனை ஆசிரியர் தாக்கியதாக பெற்றோர் மற்றும் உறவினர்களா பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுதியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி கிராமத்தில் தர்மபுரி திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் முத்தமிழ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் அரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த பரணி புஷ்பா என்பவரது 17 வயது மகன் அந்த பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று செய்முறை தேர்வு நடைபெறும் நிலையில் அதற்கான அசைன்மென்ட் நோட் பணிகள் ஏதும் செய்யாமல் இன்று மாணவன் பள்ளிக்கு வந்துள்ளார். அதனை கேட்ட வேளாண்மை ஆசிரியர் திருமால் காந்தி மாணவனை குச்சியால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் காயமடைந்த மாணவன் பெற்றோரிடம் சென்று நடந்ததை கூறியுள்ளார். இதனால் ஆக்கிரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பாரூர் போலீசார் சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story