திருச்செங்கோட்டில் தெப்பதேர் வெள்ளோட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய தெப்பகுளத்தில் மாரியம்மன் திருவிழாவை ஒட்டி தெப்பத் தேர் நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கப் பட்டுள்ளது.இதனை தொடர்ந்து தெப்பத்தேர் திருவிழா நடத்த பட உள்ளது.இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்தது வரும் நிலையில் இன்று தெப்பத்தேர் இழுத்து பார்க்கப்பட்டது.
இதில் வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன்,கோவில் அறங்காவலர் குழுத்தலைவர்தங்கமுத்து, நகர காவல் ஆ்ய்வாளர் மகேந்திரன் என பலரும் கள ஆய்வில் ஈடுபட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பொதுமக்கள் தெப்ப தேர் பவனியை தரிசிக்க தேவையான ஏற்பாடுகள் பாதுகாப்பு வேலைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை கள ஆய்வு செய்தனர்.