திருச்செங்கோடு ஹோட்டல்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு - ரூ.30 ஆயிரம் அபராதம் விதிப்பு

திருச்செங்கோடு ஹோட்டல்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு - ரூ.30 ஆயிரம் அபராதம் விதிப்பு

திடீர் ஆய்வு

நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் ஹோட்டல் மற்றும் பிரியாணி கடைகளில் மட்டும் கெட்டுப் போன பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த சுமார் 250 கிலோ எடையுள்ள பழைய மாமிசம், மீன் துண்டுகள், கோழி இறைச்சி ஆகியவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

தொடர்ந்து நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். இந்த ஆய்வு பணிகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சிங்கார வேலன், நகர துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். பிடிக்கப்பட்ட 250 கிலோ இறைச்சியும் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. 30 க்கும் மேற்பட்ட ஹோட்டல் கடை உரிமையாளர்களுக்கு சுமார் ரூ. 30,000 அபராதம் விதிக்கப் பட்டது.

Tags

Next Story