திருவள்ளுவர் அரசு கல்லூரியில் அக்.3 முதல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

திருவள்ளுவர் அரசு கல்லூரியில் அக்.3 முதல்   வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

புறக்கணிப்பு போராட்டம்

இந்திய மாணவர் சங்கம் அறிவிப்பு

இந்திய மாணவர் சங்கம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி கிளை சார்பில் வரும் 03/10/2023 அன்று முதல் தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்திய மாணவர் சங்கத்தின் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி கிளைக் கூட்டம் கிளை ஒருங்கிணைப்பாளர் ராஜசூரியா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் மு. தங்கராஜ், மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது நிசார் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கல்லூரியில் கேண்டீன் அமைத்து கொடுத்தல், அனைத்து துறை வகுப்பறைகளிலும் மின்விசிறி மின் விளக்கு குடிநீர் வசதிகள் போன்றவற்றை முறையாக அமைத்துக் கொடுத்தல், கல்லூரி வளாகம் முழுவதும் உள்ள புல் புதார்களை சுத்தம் செய்தல், கல்லூரியில் உள்ள அனைத்து தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், அனைத்து மாணவ மாணவிகளுக்கும் போதிய கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல்,

தற்போது உள்ள அனைத்து கழிப்பறைகளும் முறையாக சுத்தம் செய்தல், D BLOCK உள்ள பொருளாதார துறையில் மின்சார ஒயர்களை திருடப்பட்டது தொடர்பாக முறையான விசாரணை செய்தல், D BLOCK கட்டிடம் முழுவதும் இடிந்து மாணவர்கள் மேலே விழும் அபாயம் உள்ளது எனவே உடனடியாக இங்கு பயிலக்கூடிய மாணவ மாணவிகளை மாற்று கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்தல், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பொதுப்பணித்துறை மூலம் நமது கல்லூரியில் 2016 ஆண்டு முதல் தற்போது வரை நடைபெற்ற வேலைகள் மற்றும் அதன் செலவினங்களை மாணவர்களுக்கு தெரிவித்தல், நமது கல்லூரியில் இருக்கும் மாணவிகள் விடுதியில் மாணவிகளுக்கு நாப்கின் எரியட்டும் இயந்திரம் அமைத்துக் கொடுத்தல், மேலும் விடுதிகளில் மாணவிகளுக்கு முறையான உணவு வழங்குதல் மற்றும் தூய்மை பணியினை முறையாக மேற்கொள்ளுதல், அனைத்து துறைகளிலும் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புதல். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கல்லூரி முதல்வர் பானுமதி அவர்களிடம் மனுவாக கொடுக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகம் சரி செய்து கொடுக்கா விட்டால் வரக் கூடிய 03/10/2023 அன்று முதல் தொடர் வகுப்பு புறக்கணிப்பு. போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

Tags

Next Story