கிரேன், டூவீலர் மோதிய விபத்தில் மூவர் படுகாயம்
விபத்து
குமாரபாளையத்தில் கிரேன், டூவீலர் மோதிய விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர்.
குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர்கள் பிரேம்குமார், 20, முரளிதரன், 21, அஜய், 21. மூவரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில், பிரேம்குமார் டியோ டூவீலரை ஓட்ட, முரளிதரன், அஜய் இருவரும் பின்னால் உட்கார்ந்து வந்தனர். இவர்கள் சேலம் கோவை புறவழிச்சாலை, கோட்டைமேடு மேம்பாலம் அருகே இந்தியன் தாபா அருகே சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது, எதிரே வேகமாக வந்த கிரேன் இவர்கள் வந்த டூவீலர் மீது மோத, மூவரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் மூவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, கிரேன் ஓட்டுனர் குமாரபாளையம் பெரியார் நகரை சேர்ந்த குமார், 38, என்பவரை கைது செய்தனர்.