திருச்செங்கோடு நகர மன்ற கூட்டம்

திருச்செங்கோடு நகர மன்ற கூட்டம்

நகர மன்ற கூட்டம்

திருச்செங்கோடு நகராட்சியின் சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது, நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சரவணன் நகர்மன்றத் துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

திருக்குறள் வாசித்து நகர்மன்ற தலைவர் கூட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தீர்மானங்களின் மீது பேசிய நகர் மன்ற உறுப்பினர்கள் கூறியதாவது, எனது வார்டில் குரங்கு தொல்லை அதிகமாக உள்ளது பலமுறை கூறிவிட்டேன் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு வனத்துறை அதிகாரிகளிடம் சொல்லி கூண்டுகள் வைத்து குரங்குகளை பிடிக்க ஏற்பாடு செய்யப்படும், எட்டாவது வார்டு பிஜேபி உறுப்பினர் தினேஷ்குமார் எனது வார்டு பகுதியில் சாலை அமைக்க டெண்டர் விட்டும் ஒப்பந்ததாரர் இதுவரை சாலை அமைக்கவில்லை பள்ளி வாகனங்கள் அதிகமாக செல்லும் பகுதி என்பதால் ரோடு மேலும் மோசமாகி கொண்டுள்ளது எனவே விரைந்து சாலை அமைக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்த வேண்டும் கழிவு நீர் எனது வாழ்வு பகுதியில் தேங்கியுள்ளது இதனை அகற்ற உறிஞ்சி வாகனம் எப்போது அனுப்பப்படும் அதேபோல் கிணறு ஒன்று குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது அதனை நகராட்சி சார்பில் தூர்வாரி பொதுமக்கள் பயன்படுத்தி விடப்படுமா நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு உறிஞ்சி வாகனம் வாங்க அனுமதி கிடைத்துள்ளது விரைவில் உறிஞ்சு வாகனம் வாங்கப்படும் உங்கள் பகுதியில் உள்ள கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் ஆணையாளர் சேகர் கிணறு பகுதியை பார்வையிட்டு விட்டு வாய்ப்பு இருந்தால் நிச்சயமாக செய்து கொடுக்கப்படும் நாலாவது வார்டு திமுக உறுப்பினர் டிஎன் ரமேஷ் எங்களது பகுதியில் இருந்து அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றால் சுமார் 4 கிலோமீட்டர் நடந்து வர வேண்டி உள்ளது ஆகவே ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று அமைத்துக் கொடுக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கேட்டு வருகிறோம் இன்னும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை இடம் தர நாங்கள் தயாராக இருக்கிறோம் பெயர் பலகை தவறாக உள்ளதால் கனரக வாகன ஓட்டுநர்கள் சிறிய ரோட்டில் நுழைந்து வாகனங்களை திருப்ப முடியாமல் அவதிப்படுகிறார்கள் அதனை மாற்றி அமைத்து தர வேண்டும் ஆணையாளர் சேகர் நீங்கள் காட்டிய ஐந்து இடங்களும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட இடங்களாக இல்லை குறைந்தபட்சம் 18 க்கு 12 என்ற அளவுள்ள இடமாகவும் இல்லை எனவே துணை சுகாதார நிலையம் அமைப்பதில் சிக்கல் இருப்பதால் வேறு ஏதாவது அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட இடங்கள் இருந்து காண்பித்தால் சுகாதார நிலையம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் நெடுஞ்சாலைத்துறை போர்டு என்பதால் அவர்களிடம் கடிதம் வைத்து பெயர் பலகையை மாற்றி தர ஏற்பாடு செய்யப்படும் 13 வது வார்டு உறுப்பினர் சினேகா எங்களது வார்டு மக்களும் அந்த சுகாதார நிலையத்தில் பயன் பெற வேண்டி உள்ளதால் எங்கள் வார்டில் காண்பித்த இடத்தில் அமைத்து தந்தால் இரண்டு வார்டுகளுக்கும் பொதுவாக சுகாதார நிலையம் பயன்படும் பத்தாவது வார்டு அதிமுக உறுப்பினர் ராஜவேல் குப்பை கிடங்கில் காய்கறி வேஸ்டுகளை பயன்படுத்தி தயாரிக்கும் கேஸ் எதற்கு பயன்படுத்தப்படுகிறது இதுவரை எவ்வளவு தயாரித்துள்ளனர் என்பது குறித்து ஏதாவது தகவல் இருக்கிறதா அதேபோல குப்பைகளை எரிக்கும் இயந்திரம் வந்தால் நெசவாளர் காலனி மென்மையானதிற்கு அருகில் அமைத்தால் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும் குப்பைகளை அகற்ற அழிக்க நாங்கள் பல்வேறு ஆய்வுகளை செய்துள்ளோம் விரைவில் எந்திரங்கள் வர உள்ளது குப்பைகளை எரிக்கும் போது பறக்கும் சாம்பல் பொதுமக்களை பாதிக்காத வரையில் தண்ணீர் ஸ்ப்ரே செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளோம் எந்த இடத்தில் அமைப்பது என்பதை ஆய்வு செய்துதான் முடிவு செய்வோம் திமுக உறுப்பினர் சண்முக வடிவு கூட்டப்பள்ளி பகுதியில் கழிவுநீர் முட்பதர்களுக்குள் தேங்கியுள்ளது ஜேசிபி கொடுத்தால் அதனை முட்பதர்களை அகற்றி வெளியேற்றலாம் ஆணையாளர் சேகர் ஜேசிபி எந்திரம் உடனடியாக அனுப்பப்படும் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு விரைவில் நகர் மன்றத்திற்கு ஜேசிபி வந்து விடுவதால் இனிமேல் இது போன்ற தொல்லைகள் இருக்காது முப்பதாவது வார்டு திமுக உறுப்பினர் செல்லம்மாள் தேவராஜன் எங்களது வார்டு பகுதியில் பள்ளி செல்லும் குழந்தைகள் வெயிலில் நின்று சிரமப்பட்டு பள்ளிக்குச் செல்கிறார்கள் பேருந்து நிழல் கூடம் ஒன்று அமைத்து தர வேண்டும் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தான் அது கட்டப்பட வேண்டும் நகராட்சி நிதியில் நிழல் கூடம் கட்ட முடியாது எனவே சட்டமன்ற உறுப்பினருக்கு கடிதம் கொடுத்து நிழற்குடன் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் ராதா சேகர் மலையடி குட்டையில் கழிவு நீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக உறுப்பினர் முருகேசன் எங்களது வார்டில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது இந்த வாரத்தில் மட்டும் 13 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே நாய்களை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆணையாளர் சேகர் குமாரபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக 1200 நாய்கள் ஒரு குழுவினர் பிடித்து கருத்துடைக்காக அனுப்பியுள்ளனர் அந்த குழுவினர் திருச்செங்கோடு நகராட்சிகளிலும் நாய்கள் பிடிக்கவேண்டுமென கேட்டுள்ளோம் இன்னும் ஒரு வாரத்தில் வந்து விடுவதாக கூறியுள்ளனர் ஒரு வாரத்தில் நாய் தொல்லைக்கு முடிவு கட்டப்படும் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காக தான் நகர நகர அலுவலர் சென்னை கூட்டத்திற்கு சென்றுள்ளார் ஐந்தாவது வார்டு திமுக உறுப்பினர் டபிள்யூ டி ராஜா எனது வார்டு நெசவாளர் காலனி பகுதியில் உள்ள மென்மையானதிற்கு பின்புறம் குப்பைகளை கொட்டி தேக்கி வைப்பதால் துர்நாற்றம் வீசுகிறது கடந்த 15 நாட்களுக்கு முன் சமூக விரோதிகள் சிலர் தீ வைத்ததால் புகை சூழ்ந்து எங்கள் வார்டு பகுதியில் உள்ளவர்கள் மூச்சுத் திணறால் அவதிப்பட்டனர் எனவே குப்பைகளை இனி அங்கு கொட்ட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் அதேபோல் குப்பைகள் எரிக்கும் எந்திரம் வந்தால் அந்தப் பகுதியில் அமைக்க வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறோம் இதனால் நாலு வார்டுகள் பாதிப்படையாமல் இருக்கும் எனவே அந்தப் பகுதியில் குப்பைகள் இருக்கும் எந்திரம் அமைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு அந்தப் பகுதியில் குப்பை அரிக்கும் எந்திரம் பொருத்தம் எண்ணம் இல்லை நிச்சயமாக அந்த பகுதியில் அமைக்கப்படாது என உறுதி அளிக்கிறேன் ஆணையாளர் சேகர் இனி அந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டப் படாது 15வது வார்டு திமுக உறுப்பினர் ரவிக்குமார் எங்களது வாழ்வில் அமைக்கப்படும் சாலைகள் மழை நீர் வடிகால் இல்லாமல் அமைக்கப்படுகிறது இதனால் நீர் வெளியேற வழி இருக்காது எனவே மழைநீர் வடிகால் உடன் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தற்போது அரசின் உத்தரவுப்படி வடிகால்கள் இல்லாமல் தான் சாலை அமைக்கும் பணி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது இது குறித்து வடிகால்களுடன் சாலை அமைக்க அனுமதி கொடுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது விரைவில் அனுமதி கிடைத்தவுடன் அதன்பிறகு சாலைகள் அமைக்கும் பணி நடக்கும் என கூறினர்.

Tags

Next Story