தென்காசியில் இன்று மறுவாக்கு எண்ணிக்கை
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழனி நாடார் வெற்றி 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இதை எதிர்த்துஅதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தபால் வாக்குகளில் குளறுபடி நடந்து இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் .
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி. ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் 2, 589 தபால் வாக்குகள் இன்று காலை 10 மணிக்கு தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து எண்ணப்படுகிறது.தென்காசி சட்டமன்ற தொகுதியில் தபால் ஓட்டு மறு எண்ணிக்கையில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் (காங்கிரஸ்) பழனி நாடார் வெற்றி. காங்கிரஸ் பழனி நாடார் 1606 வாக்குகள்.
அதிமுக-செல்வமோகன்தாஸ் பாண்டியன் 673 வாக்குகள் பெற்றனர். காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி.
Next Story