பகலில் பெய்த மழையால் வியாபாரிகள் கலக்கம்

பகலில் பெய்த மழையால் வியாபாரிகள் கலக்கம்
X

குமாரபாளையத்தில் மழை

குமாரபாளையத்தில் பகலில் பெய்த மழையால் வியாபாரிகள் கலக்கமடைந்தனர் குமாரபாளையத்தில் நேற்று பகலில் மேகமூட்டமாகவும், குளிச்சியான சூழ்நிலையும் இருந்தது. மாலை 03:00 மணிக்கு மழை துவங்கியது. இந்த மழையால் சாலையோர வியாபாரிகள் உள்பட பலரும் பாதிப்புக்கு ஆளாகினர். வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். கோம்பு பள்ளத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. வெப்பத்தால் தவித்த பொதுமக்கள், இந்த மழையால் வெப்பம் தணிந்து மகிழ்ச்சியடைந்தனர்.குமாரபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால், வெப்பம் தாங்காமல் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பலரும் தவித்து வருகிறார்கள். ஆவணி மாதம் நெருங்குவதால் துணிக்கடை, நகைக்கடை, பேன்சி ஸ்டோர்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் காலை முதலே கூட்டம் அதிகம் காணப்பட்டது.

Tags

Next Story