நாமக்கல் தெற்கு தே.மு.தி.க சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
விஜயகாந்த் பிறந்தநாள் விழா
தே.மு.தி.க. நாமக்கல் தெற்கு மாவட்ட கழகம் தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, பரமத்தி வேலூர் பேரூர் கழகம், காமராஜர் சிலை அருகில், கட்சி கொடியை மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ராமலிங்கம், ஏற்றி வைத்தார். பேரூர் கழகச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றர். மாவட்ட அவைத் தலைவர், ராஜ்குமார் வழக்கறிஞர் முன்னிலை வைத்தார். துணை செயலாளர்கள், ரிச். சுந்தரானந்தர், ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் வீரமணி, மீனவர் அணி செயலாளர் ராஜேந்திரன், இனிப்புகள் வழங்கினர்.
தொடர்ந்து பொத்தனூர் பேரூர் கழகத்தில், யூனியன் ஆபீஸ் முன்பு மாவட்ட கழகச் செயலாளர் அரிமா ஆர்.கே ராமலிங்கம், கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார். பேரூர் கழகச் செயலாளர், டி.ஆர்.பி.சிவா, கழக நிர்வாகிகளை வரவேற்றார். பாண்டமங்கலம் மோகன்ராஜ் இனிப்புகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து காந்திநகர் வேர்ல்டு முதியோர் இல்லத்தில், வயதான முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கி, உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் பேரூர் கழக அவைத் தலைவர், தண்டபாணி, பொருளாளர் சிவனேசன், துணைச் செயலாளர்கள்: சீனிவாசன், ரேணுகா, ராசாத்தி, ராம்குமார், ஆனந்தகுமார், ஆறுமுகம், கணேசன், ஏ.ஆறுமுகம், ராஜேந்திரன், மற்றும் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.