இந்து முன்னணி சார்பில் தினசரி மார்கெட்டில் விநாயகர் சதுர்த்தி

இந்து முன்னணி சார்பில் தினசரி மார்கெட்டில் விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் நாமக்கல் தினசரி மார்கெட் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், செயலாளர் பொன்.வீரக்குமார், பொருளாளர் எஸ்.கே.சீனிவாசன், இணை செயலாளர் தேவி உதயகுமார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராயல் பத்மநாபன் உள்ளிட்ட பேரமைப்பு நிர்வாகிகள், காய்கறி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

விழா ஏற்பாடுகளை நாமக்கல் நகர தினசரி மார்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story