வரும் 14ம் தேதி ஓபிஎஸ்., ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வரும் 14ம் தேதி ஓபிஎஸ்., ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பாசனத்துக்கு தண்ணீர் திறக்குமாறு வலியுறுத்தி, போடிநாயக்கனூரில் வரும் 14ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பாசனத்துக்கு தண்ணீர் திறக்குமாறு வலியுறுத்தி, போடிநாயக்கனூரில் வரும் 14ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகத்தில் அவரது ஆதரவு மாவட்ட செயலாளர் சையதுகான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில், முல்லைப்பெரியாற்றில் இருந்து தந்தை பெரியார் பிடிஆர் மற்றும் பதினெட்டாம் கால்வாய் ஆகிய 3 கால்வாய்களுக்கு வழக்கமாக நவம்பரில் திறக்கப்படும் தண்ணீர் இந்த ஆண்டில் தற்போது வரை திறக்கப்பட்டதால் தேனி மாவட்டத்தில் உள்ள சுமார் 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களின் பாசன வசதி கேள்விக்குறியாக உள்ளது.

இவற்றில் குறிப்பாக போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட விவசாயிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். போடிநாயக்கனூர் தொகுதி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதி என்பதால் வேண்டுமென்றே அரசியல் காரணங்களுக்காக அரசு தண்ணீர் திறக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கருதுகிறோம். இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். அதனைக் கண்டித்து தான் வரும் டிசம்பர் 15ஆம் தேதியன்று உத்தமபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில் அமமுகவினரும் பங்கேற்க உள்ளனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் டிசம்பர் 14ஆம் தேதியன்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று நடக்கும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போட்டியாக நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. விவசாயிகள் நலனுக்காக மட்டுமே ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்று கூறினார்.

Tags

Next Story