குடியிருப்பு சுற்றுச்சுவருக்குள் நுழைந்த 7 அடி நீள பாம்பு மீட்பு

குடியிருப்பு சுற்றுச்சுவருக்குள் நுழைந்த  7 அடி நீள பாம்பு மீட்பு

மீட்கப்பட்ட பாம்பு 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் குடியிருப்பு பகுதியில் சுரேஷ் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவருக்குள் சுமார் 7 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று நுழைந்துள்ளது இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அச்சமடைந்து இதுகுறித்து குடியாத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் குழிக்குள் உள்ளே புகுந்த பாம்பு வெளியே வராமல் பதுங்கிய நிலையில் பினாயில் மற்றும் தண்ணீர் உள்ளிட்டவற்றை குழிக்குள் ஊற்றி போராடி பாம்பை வெளியே வரவழைத்தனர். இதனையடுத்து சுமார் 7 அடி நீளம் இருந்த பாம்பை பிடித்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் அதை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story