மத்தியில் பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: விஜய் வசந்த்
பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர்
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் இன்று பேச்சிப்பாறை பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பொது மக்களிடையே பேசும்போது,மக்களின் கவலையை அறிந்து அவர்களின் வளர்ச்சிக்காகவும் சிந்தித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
இந்த முறை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள வாக்குறுதி மக்களின் வாக்குறுதியாக உள்ளது. 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்.படித்த பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்.100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 400 ரூபாய் சம்பளம் உயர்த்திக் கொடுப்பது உட்பட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் இவை அனைத்தும் நிறைவேற்றப்படும்.மத்தியில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வேண்டும். பேச்சிப்பாறை பகுதி இயற்கை எழில் சூழ்ந்த பகுதி இந்த பகுதியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக் கொண்டார் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னாள் எம்எல்ஏ லீமா ரோஸ் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.