நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் முதல் மாநாடு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் முதல் மாநாடு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் முதல் மாநாடு 

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற இருப்பதை முன்னிட்டு சாலவாக்கம் வடக்கு ஒன்றிய பகுதிகளில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கிராமப்புற முக்கிய சாலையோரங்களில் சுவர் விளம்பரங்கள் எழுதி பொதுமக்கள் மற்றும் மற்ற அரசியல் கட்சியினரை கவர்ந்து வருகின்றனர்.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் அரசியல் கட்சி தொடங்கி முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற இருப்பதை முன்னிட்டு காவல்துறை அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மாநாடு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சுவர் விளம்பரங்கள் மூலமாக தெரியப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் வடக்கு ஒன்றிய தமிழக வெற்றி கழகம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகி எஸ்.பி.கே.தென்னரசு அறிவுறுத்தலின் படி, சாலவாக்கம் வடக்கு ஒன்றிய தலைவர் ஆர்.பி.டி.கே. ராஜசேகர் ஏற்பாட்டில், சாலவாக்கம், திருமுக்கூடல்,

புள்ளம்பாக்கம், எடமச்சி, மதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழக வெற்றி கழக மாநாட்டின் சுவர் விளம்பரங்கள் எழுதி பொதுமக்கள் மற்றும் மற்ற அரசியல் கட்சியினரை கவர்ந்து வருகின்றனர்.

Tags

Next Story