வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கு; இதுதான் கம்பர் கண்ட கனவு: மு.க.ஸ்டாலின்

வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கு; இதுதான் கம்பர் கண்ட கனவு: மு.க.ஸ்டாலின்
X

CM Stalin

பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கம்பன் கழகம் 51 என்னும் பெயரில் பொலிவுமிகு பொன்விழா நிறைவு என்னும் தலைப்பில் நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் இந்த நிகழ்வுகள் நடைபெற உள்ளது.தொடக்க நாளான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக விழா தலைமை ஏற்று கம்பன் கலை களஞ்சியம் என்னும் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். ஆழ்வார்கள் ஆய்வு மையம் நிறுவியுள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பன் விருதினை கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.மேலும் கம்பன் கழகம் வழங்கும் பொன்விழா ஆண்டின் சிறப்பு விருதான இயற்றமிழ் அறிஞர் விருதினை பேராசிரியர் முனைவர் தெ.ஞானசுந்தரம்,கம்பன் அடிசூடி பழ.பழநியப்பன், பேராசிரியர் முனைவர் சாரதா நம்பி ஆரூரன்,சொல் வேந்தர் சுகி.சிவம்,கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்,ஆகியோருக்கு முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “1969ல் கரைக்குடியில் நடந்த கம்பன் விழாவிலும் அதே போல்,1999 ல் இதே அரங்கில் நடந்த விழாவிலும் கலைஞர் பங்கேற்றுள்ளார். பெரியார்,அண்ணா, கலைஞர் வழியில் தமிழ்நாட்டின் உயர்வுக்கான பாதையில் நடந்து வருகிறேன். கம்பர் கண்ட கனவு போல வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. சமூக வளர்ச்சி குறியீடுகளில் முன்னணி மாநிலமாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இத்தகைய மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதும் கம்பருக்கு ஆற்றும் தொண்டுதான். இது போன்ற விழாக்களின் இலக்கிய சுவையை பேசுவது மட்டுமல்லாமல் இன்றைய இளைய தலைமுறைக்கும் இலக்கிய சுவையை ஊட்டுகின்ற வகையில் அமையும். திராவிட இயக்கம் கம்பராமாயணத்தை மாறுபட்ட கோணத்தில் பார்த்த இயக்கம். சில கருத்துக்களுக்காக விமர்சிக்கப்பட்டாலும் கவிதைக்காகவும் அதில் இருக்கும் தமிழுக்காகவும் பாராட்டியது. அண்ணா முதலமைச்சர் ஆக இருந்த காலத்தில் கம்பருக்கு சிலை நிறுவப்பட்டது. அயோத்திய நாட்டை ஒப்பிட்ட கம்பர் காவிரியை மேற்கோள் காட்டி பேசி உள்ளார் என்றார்.

Next Story