திமுக கூட்டணியை நம்பி மட்டுமே உள்ளது: எடப்பாடி பழனிசாமி

EPS
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “கொரோனா காலத்தில் நிர்வாகத் திறமைமிக்க அரசு அதிமுக அரசு செயல்பட்டது. பள்ளி மாணவர்கள் நலன் கருதி ஆல் பாஸ் போடப்பட்டது. திமுக அரசின் ஆயுட்காலம் 8 மாதம் மட்டுமே. இப்போது வந்து நலம்காக்கும் ஸ்டாலின் என்ற பெயரில் கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற முயல்கிறார். மக்களுக்கு பயன்பெறுகின்ற திட்டத்தை எந்த ஆட்சி கொண்டுவந்திருந்தாலும் அடுத்த ஆட்சி அதைத் தொடர வேண்டும். திமுகவைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட எண்ணமே கிடையாது. 2026ல் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கின்ற போது மத்தியில் நிறைய நிதிகளைப் பெற்று இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க பாடுபடும். திமுக கூட்டணியை நம்பி மட்டுமே உள்ளது. ஆனால் அதிமுக கூட்டணி மக்களை நம்பி உள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தவுடன் முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது. எங்கள் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்பதற்கு இந்த கூட்டமே சாட்சி. இது எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விவசாயிகளை பழிவாங்கும் விதமாக திமுக அரசு செயல்படுகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றார்.
