கண்டிப்பா இதை செய்யணும்: திமுகவிடம் ஆதரவு கேட்ட எடப்பாடி பழனிசாமி!!

edapadi palanisamy
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வெள்ளிக்கிழமை முதல் திருவண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து இன்று காலை அவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து திருக்கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளதை தான் வரவேற்கிறேன்.குடியரசுத் துணைத் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்தவர் வருவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. சி.பி ராதாகிருஷ்ணனுக்கு தமிழகத்தை சேர்ந்த அத்தனை எம்.பிக்களும், கட்சி பேதமின்றி ஒருமனதாக ஆதரவு தெரிவிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
