இது ஒரு கருப்பு நாள்: திருமணநாளில் கொந்தளித்த மு.க.ஸ்டாலின்!!

இது ஒரு கருப்பு நாள்: திருமணநாளில் கொந்தளித்த மு.க.ஸ்டாலின்!!
X

CM stalin

30 நாட்கள் சிறையில் இருந்தாலே பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களின் பதவியை பறிக்கும் வகையில் மக்களவையில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

30 நாட்கள் சிறையில் இருந்தாலே பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களின் பதவியை பறிக்கும் வகையில் மக்களவையில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “மக்களவையில் அமித் ஷா தாக்கல் செய்த 130வது அரசியலமைப்பு திருத்தம் சீர்திருத்தம் அல்ல - இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கருப்பு மசோதா. இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றி, அரசியலமைப்பையும் அதன் ஜனநாயக அடித்தளத்தையும் சீர்குலைக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது. விசாரணை, தீர்ப்பு என எதுவுமே இல்லாமல் 30 நாட்கள் கைதாகி இருந்தாலே பதவி நீக்கம் என்பது கருப்பு சட்டம். வாக்குத்திருட்டு, எதிரணியை அமைதியாக்குதல், மாநிலங்களை நசுக்குதல் என சர்வாதிகாரம் இப்படித்தான் தொடங்கும். போட்டியாளர்களை கைது செய்து பதவியில் இருந்து நீக்கும் அதிகாரத்தை தனக்குத்தானே வழங்குவதைத்தான் வளர்ந்து வரும் சர்வாதிகாரிகள் முதலில் செய்வார்கள். இம்மசோதா அதைத்தான் செய்ய முயல்கிறது. பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்களாகவோ அல்லது அமைச்சர்களாகவோ இருக்கும் எதிர்க் கட்சிகளை அச்சுறுத்துவதற்கான ஒரு தீய முயற்சி இது. இந்த அரசியலமைப்புக்கு விரோதமான திருத்தம் நிச்சயமாக நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும், ஏனெனில் குற்றம் விசாரணைக்குப் பிறகுதான் தீர்மானிக்கப்படுகிறது, ஒரு வழக்கைப் பதிவு செய்வதன் மூலம் அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story